பூரண வடிவுள்ள சீயோனிலே


1.       பூரண வடிவுள்ள சீயோனிலே
            பாரினில் ஜெயங்கொண்டே பரிசுத்தரே
            ஆர்ப்பரிப்போடு கீதங்கள் பாட
            ஆனந்தம் பொங்கிடும்

பல்லவி

                        சீயோன் சீயோன் சிகரம்
                        சீயோன் தூய்மையின் சிகரம்
                        எருசலேம் பரம நகரம்
                        ஏகுவோம் என்றென்றும் வாழவே

2.         தூய பிதாவின் தேசமதில்
            நேயர்கள் அவர் முகம் கண்டிடுவார்
            கண்ணீர்கள் யாவும் தேவனே துடைப்பார்
            கவலைகள் ஒழிந்திடுமே

3.         பளிங்கு நதியின் இரு கரைகளிலே
            பன்னிரு கனிதரும் விருட்சமுண்டே
            பரமனின் அன்பால் நிறைந்தவர் பாடும்
            பாட்டிற்கோர் இணையில்லையே

4.         கற்புள்ள கன்னிகை கறையற்றவள்
            கருத்துடன் ஆட்டுக்குட்டியானவரை
            மகிழ்வுடன் நித்தம் பின் சென்றதாலே
            மகிபனோடாட்சி செய்வார்

5.         நகரத்தில் மூலைக்கல் மகிபனேசு
            நானிலமெங்கும் ஒளி வீசுதே
            சீயோனைப் பணிந்து தேவாதி தேவன்
            சீக்கிரம் வெளிப்படுவார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு