என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்


1.       என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்
            தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன்

2.         லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதே
            வாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே               - என்ன

3.         இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமே
            மண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே     - என்ன

4.         வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்
            கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன்    - என்ன

5.         என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்
            என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே                     - என்ன

6.         இப்பாழுலகத்தில் என் ஆசை ஒன்றுண்டோ
            பஞ்சுபோல் பறந்து போமே பாழுலகமே                           - என்ன

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு