அன்பர் அன்பை யாரால் கூறலாம்


பல்லவி

            அன்பர் அன்பை யாரால் கூறலாம் - ஆ! ஆச்சரியம்
            அன்பாகவே இருக்கும் என் நேசர்!

அனுபல்லவி

            அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!
            அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்!        - அன்பர்

சரணங்கள்

1.         எல்லா ஜலமும் மையானாலுமே - அன்பை எழுதிட
            எல்லா மரமும் பேனாவானாலுமே
            ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்
            அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு          - அன்பர்

2.         மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் - ஆழ்ந்து தூதரும்
            பார்ப்பதில் பணிந்து குணிகிறார்
            பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது
            என்ன அன்பு என்ன நேசம் மன்னரேசின் மகத்துவநேசம்!           - அன்பர்

3.         ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் - ஆ! ஏராளம்
            ஏழை என்னால் பகரக் கூடுமோ
            அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
            அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! - அன்பர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு