கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே


                   கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே
                        யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே
                        மேக மீதினில் தேவன் ராஜாவாகவே
                        வேகம் வாருமே அழகு லீலி புஷ்பமே

1.         பள்ளத்தாக்கிலே நாங்கள் நடந்த போதிலும்
            பாசமாகவே எம்மைத் தூக்கி மீட்டீரே
            காலைதோறுமே தேவ சுத்த கிருபையே
            பனியைப் போலவே என்றும் வந்து இறங்குதே
            ஜீவனுள்ள தேவனை சொந்தமாகவே
            ஏற்றுக்கொண்டதாலே என்றும் செழித்து ஓங்குவோம்     - கர்த்தரே

2.         கருவில் வளரும்போது தேவன் கண்கள் கண்டதே
            இருளில் நடக்கும்போது தேவன் ஒளியும் தந்தீரே
            அமர்ந்த தண்ணீர் அருகில் நீரும் அழைத்து சென்றீரே
            உயர்ந்த சீயோன் மலையின் மீது நிறுத்தி வைத்தீரே
            மங்கி எரியும் திரியைப் போல மாறிடாமலே
            மன்னா உந்தன் ஆவி என்னை நெருங்கி ஏவுதே           - கர்த்தரே

3.         வார்த்தையாலே படைத்த இந்த வானம் பூமியும்
            வல்ல தேவ நாமம் என்றும் சொல்லிப் பாடுதே
            வார்த்தையாக இருந்த தேவ சொந்த மைந்தனும்
            நிந்தை சுமக்க இந்த பூமி வந்து பிறந்தாரே
            அன்பினாலே நம்மை சேர்த்த அன்பு தேவனை
            இன்பமாகவே இன்றும் என்றும் பாடி போற்றுவோம்         - கர்த்தரே

Comments

  1. Also a few at http://www.hymntime.com/tch/non/ta/ta.htm. More probably on the way.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! நீங்கள் கூறிய இணையதளம் அருமையாக உள்ளது. நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு