30 June 2018

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ!

கன்:352

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை

                        அழைத்தீரரசே அருளாலே

 

                             சரணங்கள்

 

1.         நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை

            நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து

            மந்தையில் சேர்த்துக் கொண்டீரே - அன்பிதோ

 

2.         சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்

            மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்

            சித்தத்தைச் செய்யச் செய்தீரே - அன்பிதோ

 

3.         ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்

            ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்

            என்னை பேரின்பமெனக்கே - அன்பிதோ

 

4.         தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த

            தூய கீதமுடன் துயருடன் பாட

            ஏழைக்கும் கிருபை செய்தீரே!  - அன்பிதோ

 

5.         உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்

            உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்

            தங்கிடத் தயவருளும் - அன்பிதோ

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...