30 June 2018

அன்பிலே பூரணரே - எங்கள்

கன்:263

To Download Txt Lyrics file

 

                             பல்லவி

 

                   அன்பிலே பூரணரே - எங்கள்

                        ஆனந்த ரூபா அதிசய ராஜா

 

                             அனுபல்லவி

 

            அழகில் சிறந்தோனே - எங்கள்

            ஆசையின் கோமானே

            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்

            அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே - அன்பிலே

 

                             சரணங்கள்

 

1.         காத்தீரே கருணையுடன் - எம்

            கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக்

            கதியில்லா ஏழைகளின் - பெரும்

            கவலைகளைப் போக்கி

            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்

            ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன் - அன்பிலே

 

2.         ஆனந்தம் ஆனந்தமே உம்

            ஆருயிர் ஈந்திர் அவனியில் வந்தீர்

            அலகைதனை வென்றீர் அவன்

            அடிமைகளை மீட்டீர்

            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்

            அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே

 

3.         கோடையில் குளிர்தருவே - கடும்

            வாடையின் மறைவே ஏழையின் உறவே

            கூடுவோம் திருப்பாதம் - தினம்

            பாடுவோரும் அவர் கீதம்

            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்

            அன்பே, இன்பமே, அன்னையின் மேலாய் - அன்பிலே

 

4.         நித்திய பரிசுத்தரே - உம்

            வருகையில் அடியாரைப் பரிசுத்ம் செய்யும்

            உத்தம ஜீவிகளாய் நல்

            நித்திய வாழ்வினிலே

            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்

            அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் - அன்பிலே

 

5.         தோத்திரம் துதியுமக்கே - தேவ

            அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்

            ஆயத்தமுள்ளோர்க்கே நீர்

            அருணோதயமாவீர்

            ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்

            அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...