பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி


பல்லவி

          பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி
            அருளுவீர் தே.... வா

சரணங்கள்

1.         அசுத்தத்தை அகற்றி விட்டுப் பரிசுத்தம் பெற்றிட
            அருளுவீர் தே... வா
            ஆதி ஆவி இப்போ - நலமுடன்                       - பூர்வீகமான

2.         இருதயத்தில் இதை எடுத்திடாதிருக்கின்றோர்
            காருண்யத்தில் இ... ன்று
            இயேசுவின் பாதம் சேர - நலமுடன்                  - பூர்வீகமான

3.         அந்தகார லோகத்தில் நாசத்திற் கோடுவோரை
            பந்துவான இயே...சு
            சொந்தமாய்ச் சேர்த்திடவே - நலமுடன்           - பூர்வீகமான

4.         சக்தியான சாட்சியாய் எங்கும் யான் கண்டிடவே
            சக்தி நல்கும் தே... வா
            இத்தினம் நின் தாசரில் - நலமுடன்                - பூர்வீகமான

5.         ஆயிரம் ஆயிரமாய் ஆத்துமாதாயஞ் செய்ய
            அதிகாலை ஜீ...வன்
            அடியாரில் அருளிடும் - நலமுடன்                   - பூர்வீகமான  

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு