30 June 2018

ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர்

கன்:341

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                   ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ

                        நீதியாம் ஜோதி அனாதி தேவனே - உம்

                        நீதிக்கோர் எல்லையுண்டோ - இயேசு

 

                             சரணங்கள்

 

1.         எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர்

            பத்திலோர் பங்கு போதா தென்றெண்ணி - நான்

            தத்தம் செய்தேன் உமக்கே - ஆதி

 

2.         எத்தன் எனக்காக - இன்னுயிர் கொடுத்தீரே

            எதைச் செலுத்துவேன் இயேசுவின் அன்பிற்கு

            இதயம் ஈடாகுமோ? - ஆதி

 

3.         ஆழ்ந்த கடலில் அமிழ்ந்து போன என்னைத்

            தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க என்

            என் துதிகள் தான் போதுமோ? - ஆதி

 

4.         பாவத்தில் மாண்ட என்னைக் கோபத்தால் அழிக்காமல்

            இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து - நான்

            பட்சமாய் போற்றிடுவேன் - ஆதி

 

5.         அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில்

            நான்தான் பயப்படாதிருங்கள் என்று உம்

            அன்பின் தொனி கேட்குதே - ஆதி

 

6.         கெத்சமெனே பூங்காவில் பட்சமாய் வேண்டி நிற்கும்

            இரத்த வியர்வையில் வேதனை தரும் உம்

            சத்தம் தொனித்திடுதே - ஆதி

 

7.         எண்ணும் நன்மை எதுவும் எண்ணிலே இல்லை ஐயா

            பின்னே ஏன் என்னை நேசித்தீரோ

            என்னில் கொண்ட உம் அன்புதானோ - ஆதி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...