பரலோகமே என் சொந்தமே
பல்லவி
பரலோகமே என் சொந்தமே
என்று
காண்பேனோ
என்
இன்ப இயேசுவை
என்று
காண்பேனோ
சரணங்கள்
1. வருத்தம்
பசி தாகம்
மனத்துயரம்
அங்கே இல்லை
விண்
கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர்
பாதம் சேர்வேன் - பரலோகமே
2. சிலுவையில்
அறையுண்டேன்
இனி
நானல்ல இயேசுவே
அவரின்
மகிமையே
எனது
இலட்சியமே - பரலோகமே
3. இயேசு
என் நம்பிக்கையாம்
இந்த
பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த
சிந்தையுடன்
இயேசுவைப்
பின்பற்றுவேன் - பரலோகமே
4. ஓட்டத்தை
ஜெயமுடன்
நானும்
ஓடிட அருள் செய்வார்
விசுவாச
பாதையில்
சோராது
ஓடிடுவேன் - பரலோகமே
5. பரம
சுகம் காண்பேன்
பரன்
தேசம் அதில் சேர்வேன்
இராப்பகல்
இல்லையே
இரட்சகர்
வெளிச்சமே - பரலோகமே
6. அழைப்பின்
சத்தம் கேட்டு
நானும்
ஆயத்தமாகிடுவேன்
நாட்களும்
நெருங்குதே
வாஞ்சையும்
பெருகுதே -
பரலோகமே
7. பளிங்கு
நதியோரம்
சுத்தர்
தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள்
பாடிட
தூயனை
தரிசிப்பேன் - பரலோகமே
Comments
Post a Comment