30 June 2018

கல்லறைக் காவலில் காயமுடன்


                   கல்லறைக் காவலில் காயமுடன்
                        கடும் அசுத்தாவி பிடித்தோனவன்
                        கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான்

1.         விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் - இனி
            வேதனை வேண்டாமென்றான்
            விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே                    - கல்லறை

2.         கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல - அவை
            கடலினில் மாய்ந்தனவே
            கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே             - கல்லறை

3.         அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு
            நாதனைக் கண்டோடும்
            அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே             - கல்லறை

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...