30 June 2018

மேகங்கள் நடுவே வழி பிறக்கும்


          மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
            பூதங்கள் கடந்து கடந்து வரும்
            தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
            பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

பல்லவி

                        வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
                        இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்
                        பரமன் இயேசுவின் புன்னகை முகம் - என்
                        கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2.         நாற்றிசையினின்றும் கூடிடுவார்
            நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
            தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்
            பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3.         கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
            கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
            கர்த்தரின் வருகை நாளின்போது
            பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4.         திருடன் வருகை போலிருக்கும்
            தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
            காலையோ மாலையோ நள்ளிரவோ
            பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...