30 June 2018

சீயோனே ஆர்ப்பரி


பல்லவி

                   சீயோனே ஆர்ப்பரி
                        சிருஷ்டி கர்த்தரான உந்தன்
                        சர்வ வல்ல தேவனே

சரணங்கள்

1.         சென்றதாம் பாதைகளிலே
            சேதமே யாதுமணுகா
            கண்மணி போலக் காவல் செய்தோனை
            நன்றியுடன் பாடுவோம்                          - சீயோனே

2.         நீக்கினார் பாவப்பாரமே
            போக்கினார் சாபம் யாவுமே
            தாழ்த்தியே நீசக் கோலமதாகி
            தம் ஜீவனை ஈந்தாரே                           - சீயோனே

3.         ஆதரவற்ற நேரத்தில்
            ஆறுதலில்லா வேளையில்
            அன்பாலணைத்து ஆறுதலீந்த
            அன்பனைப் போற்றிடுவோம்                  - சீயோனே

4.         நிந்தையில் சோதனையிலும்
            வந்ததாலம் தொல்லைகளிலும்
            மாண்டவரோடு எம்மையும் மாளா
            ஆண்டவர் ஆதரித்தார்                       - சீயோனே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...