வளர்ந்தே பெருகுக என்றே - உளம்
1. வளர்ந்தே
பெருகுக என்றே - உளம்
மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர்
தளர்ந்தே சோர்வுறும் கால்களே - பலம்
அடைந்தே நடந்திட வாரீர்
பல்லவி
பெருகுவோம் - வளர்ந்து
பெருகுவோம் - தேவன்
அருளும் ஆவியின்
அருமையாம் ஒளியில் - வளர்ந்தே
பெருகுவோம்
2. இருநூறாண்டுகள் இறைவன் - நெல்லைத்
திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார்
வரும்பல ஆண்டுகள் எல்லாம் - இன்னும்
பெருகிட அருள்வரம் ஈவார்
3. பிரிவினை எழுந்திடும் நேரம் - நம்மைக்
கரிசனை யோடவர் இணைத்தார்
உரிமையாய் ஒருமையில் வளர - அவர்
பரிவுடன் தினம் நடத்திடுவார்
4. தூய்மையில் தவறிய வேளை - நம்மைத்
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு மேலும் - நம்மைத்
தாங்கியே தினம் அணைத்திடுவார்
5. ஒளியென உலகினில் வந்தார் - நம்மை
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாக - என்றும்
ஒளிர்ந்திட ஓடியே வாரீர்
Comments
Post a Comment