உத்தமக் கிறிஸ்தவர் யாரோ


பல்லவி

                        உத்தமக் கிறிஸ்தவர் யாரோ
                        நித்தமும் கிறிஸ்துவைப் பின்பற்றுவோரே (2)
                        உத்தமக் கிறிஸ்தவரே

சரணங்கள்

1.         அன்பினால் எதையும் வென்றிடுவாயா
            மன்னிக்கப் பிறரை முந்திடுவார்
            உண்மையே என்றும் பேசுவார்
            இன்முகமே தினம் காட்டிடுவார்                        - உத்தம

2.         ஆலயம் ஒழுங்காய்ச் சென்றிடுவார்
            உள்ளமே ஆலயம் ஆக்கிடுவார்
            வேதத்தை ஆவலாய்ப் படித்திடுவார்
            பாதைக்குத் தீபமாய்க் கொண்டிடுவார்              - உத்தம

3.         செய் தொழில் ஊக்கமாய் செய்திடுவார்
            பொய் வழி சென்றிட மறுத்திடுவார்
            அரசியலில் அவர் இறங்கிடுவார்
            அநியாய வழிதனை விடுத்திடுவார்                   - உத்தம

4.         திருச்சபை தேர்தலில் பங்கு கொள்வார்
            பரிசுத்தத் தலைவரைத் தெரிந்தெடுப்பார்
            பொறுப்புகள் ஏற்றுமே பணிபுரிவார்
            பொறுமையின் சின்னமாய் விளங்கிடுவார்          - உத்தம

5.         வாழ்க்கையில் கிறிஸ்துவைக் காட்டிடுவார்
            சொல்லோடு நின்றிட மறுத்திடுவார்
            சொல் செயல் சிந்தனை மூன்றிலுமே
            பிறர்க்கென வாழ்ந்திட முயன்றிடுவார்               - உத்தம

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு