30 June 2018

ஆகா என்ன இன்பம் பரலோக இன்பம்

கன்:266

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                   ஆகா என்ன இன்பம் பரலோக இன்பம்

                        இன்ப இயேசு அளித்தனரே

                        அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா!

                        அன்பை கூற நாவும் போதுமோ

 

                             சரணங்கள்

 

1.         நீசத்துரோகி எந்தனை - பாசமாய் ஏற்றீரோ நீர்

            பாவ உளையினின்றே - தூக்கி எடுத்தீரோ நீர் - ஆகா

 

2.         நாசபுரி நோக்கியே - விரைந்து சென்ற என்னை

            பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர் - ஆகா

 

3.         நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்

            பரிந்து பேசி அன்பால் - நிலையாய் நிறுத்தினீரே - ஆகா

 

4.         எச்சரிப்பின் சத்தத்தை - தள்ளி விட்டபோதிலும்

            அன்பின் சவுக்கடியால் - சேர்த்தன்பாய் ஆதரித்தீர் - ஆகா

 

5.         காரிருள் சூழும் வேளை - கலங்கித் தவிக்கையில்

            காத்து நீர் என்னைத் தேற்றிக் - கருத்தாய் ஆதரித்தீர் - ஆகா

 

6.         பிராணநாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்

            ஆருயிர் நேசா உம்மை காண ஆசை பொங்குதே - ஆகா

 

7.         அழைப்பின் சத்தம் கேட்க - நாட்கள் அதிகமாமோ

            நேசர் மார்ப்பில் சாய்திட - வாஞ்சை பெருகிடுதே - ஆகா

 

8.         ஆகாய மேகந்தனில் சேர்ந்திடும் நேரந்தனில்

            ஆனந்தம் ஆனந்தமே - என்றென்றும் ஆனந்தமே - ஆகா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...