30 June 2018

இயேசுவை நாம் எங்கே காணலாம்


பல்லவி

                   இயேசுவை நாம் எங்கே காணலாம்
                        அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

அனுபல்லவி

            பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா?
            கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ?

சரணங்கள்

1.         ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
            ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
            தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
            பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே                     - இயேசுவை

2.         வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
            வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
            காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
            கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ             - இயேசுவை

3.         கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
            மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
            விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
            கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் - இயேசுவை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...