தேவ கிருபை என்றுமுள்ளதே
பல்லவி
தேவ கிருபை
என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
3. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
4. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியமும் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளது - தேவ கிருபை
5. நித்திய தேவனாம் சத்தியபரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ கிருபை
Comments
Post a Comment