மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்


1.       மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
            இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
            இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
            எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்

                        ஆ ஆ ஆனந்தமே பரமானந்தமே
                        இது மாபெரும் பாக்கியமே

2.         சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
            தூரம் போயினும் கண்டு கொண்டார்
            தமது ஜீவனை எனக்கும் அளித்து
            ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3.         எந்தச் சூழ்நிலையும், அவர் அன்பினின்று
            என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
            என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
            அவர் வரும்வரை காத்துக்கொள்வேன்

4.         அவர் வரும் நாளினில் என்னை கரம் அசைத்து
            அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
            அவர் சமூகமதில் அங்கே அவருடனே
            ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே