30 June 2018

நெஞ்சமே துதி பாடிடு

நெஞ்சமே துதி பாடிடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நெஞ்சமே துதி பாடிடு

                        அஞ்சிடாதே நீ ஆடிடு

                        வல்லவர் செய்த நன்மைகள்

                        சொல்லிப் பாடிடு

 

1.         பாடுகின்ற பறவைகள்

            ஓடும் நதிகளும் - 2

            வானமும் பூமியும்

            தேவன் தந்திட்டார் - 2 - நெஞ்சமே

 

2.         வண்ண மலர்கள் போலவே

            உன்னை உடுத்திட்டார் - 2

            உண்ணவும் உறங்கவும்

            தேவன் தந்திட்டார் - 2 - நெஞ்சமே

 

3.         ஆழ்கடல் நீர் மச்சமும்

            ஆண்டவன் புகழ் - 2

            பாடிட நீயும் இன்றே

            போற்றிப் பாடிடு - 2 - நெஞ்சமே

 

4.         கண்ணீர் சிந்தும் வேளையில்

            கர்த்தர் கைவிடார் - 2

            காலங்கள் மாறினும்

            இயேசு மாறிடார் (ஓ) - 2 - நெஞ்சமே

 

5.         பாவியான என்னையும்

            தேவன் மீட்டிட்டார் - 2

            கண்மணி போல் என்னை

            கர்த்தர் தேற்றினார் - 2 - நெஞ்சமே

 

YouTube Link
YouTube Link
YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...