30 June 2018

ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன்

கன்:275

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன்

            ஆசையவரென் ஆத்துமாவிற்கே

            ஆனந்தமான ஆசிகளருளும்

            ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே

 

                             பல்லவி

 

                        இயேசுவல்லால் இயேசுவல்லால்

                        இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே

                        இயேசுவல்லால் இயேசுவல்லால்

                        இன்பம் வேறு எங்குமில்லையே

 

2.         தந்தை தாயு முன் சொந்தமானோர்களும்

            தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ

            தாங்கிடுவே னென் நீதியின் கரத்தால்

            தாபரமும் நல்ல நாதனுமென்றார் - இயேசு

 

3.         அழுகையின் தாழ்வில் நடப்பவரே

            ஆழிபோல் வான் மழை நிறைக்குமே

            சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி

            ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம் - இயேசு

 

4.         கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே

            கிருபையும் வெளியாகினதே

            நீக்கியே சாவினை நற் சுவிசேஷத்தால்

            ஜீவன் அழியாமை வெளியாக்கினார் - இயேசு

 

5.         ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்

            மகிழ்ச்சியின் கிரீடமாகவே

            அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே

            விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் - இயேசு

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...