30 June 2018

என்னை நேசிக்கின்றாயா?


                   என்னை நேசிக்கின்றாயா?
                        என்னை நேசிக்கின்றாயா?
                        கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
                        நேசியாமல் இருப்பாயா?

சரணங்கள்

1.         பாவத்தின் அகோரத்தைப் பார்
            பாதகத்தின் முடிவினைப் பார்
            பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
            பலியானேன் பாவி உனக்காய்                 - என்னை

2.         பாவம் பாரா பரிசுத்தர் நான்
            பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
            உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
            பாதம் தன்னில் இளைப்பாற வா            - என்னை

3.         வானம் பூமி படைத்திருந்தும்
            வாடினேன் உன்னை இழந்ததினால்
            தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
            ஓடி வந்தேன் மானிடனாய்                    - என்னை

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...