இயேசுவை நோக்கி நான் முன் நடப்பேன்


பல்லவி

                   இயேசுவை நோக்கி நான் முன் நடப்பேன்
                        அவர் முகத்திரு ஒளி என் முன்வீச
                        என் பின்னே இருள்தான் பின்னோக்கிடேன்
                        முன்னேறி பயணம் நான் தொடர்ந்திடுவேன்

சரணங்கள்

1.         கோடிக் கோடி மக்கள் அழியும்போது
            ஓடி நீ தப்பிடு என்றார் என்னை
            மலை மீது ஏறிப் பின்னிட்டுப் பார்த்து
            சிலையாக மாறுவதா? (2)

2.         கடல் மீது நடந்திட நான் துணிந்தேன்
            அலைமோதும் நிலை கண்டு பின்னோக்கினேன்
            ஆழ்ந்திட்ட என்னைத் தம் கரம் நீட்டி
            என்னுயிர் மீட்டு விட்டார் (2)

3.         கலப்பையில் கை வைத்துப் பின் திரும்பி
            நலமான தகுதியை இழப்பதுண்மை
            சிலரேனும் இயேசு மந்தையில் சேர
            பெலத்தோடு பணிபுரிவேன் (2)

4.         அவர் அடிச்சுவட்டிலே நான் நடந்தால்
            அவர் பாதக் காயத்தில் பாய்ந்த இரத்தம்
            என் பாதம் நனைக்க என்னுள்ளம் குளிர
            பின் வாங்கி இனி சோர்வேனோ (2)

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே