ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு


1.       ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு
            விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
            நம்பிதா அழைக்கும்பொழுது
            நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

பல்லவி

                        இன்பராய் ஈற்றிலே
                        மோட்சகரையில் நாம் சந்திப்போம் - அல்லேலூயா
                        இன்பராய் ஈற்றிலே
                        மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2.         அந்த வான் கரையில் நாம் நின்று
            விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்
            துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
            சுத்தரில் ஆறுதல் அடைவோம்                        - இன்பராய்

3.         நம் பிதாவின் அன்பை நினைத்து
            அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
            மீட்பின் நன்மைகளை உணர்ந்து
            அவரை வணங்கித் துதிப்போம்.                        - இன்பராய்

4.         அந்த மோட்சகரையடைந்து
            வானசேனையுடன் களிப்போம்
            நம் தொல்லை யாத்திரை முடித்து
            விண் கிரீடத்தை நாம் தரிப்போம்                     - இன்பராய்

5.         சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
            சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
            துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
            சேமமாய் நாம் இளைப்பாறுவோம்                      - இன்பராய்

6.         அங்கே நம் இரட்சகர் என்றென்றும்
            ஆளுகை செய்து வீற்றிருப்பார்
            துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
            தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்.               - இன்பராய்

7.         தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
            கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
            பக்தர் அங்கே முடிசூடுவார்
            ஓர் முடி அங்குண்டு எனக்கும்                           - இன்பராய்

8.         என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
            ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
            அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
            ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன்                      - இன்பராய்

9.         ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
            என்று நல் மீட்பர் அழைக்கிறார்
            மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
            எல்லோரும் வாருங்கள் என்கிறார்                      - இன்பராய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு