30 June 2018

இஸ்ரவேலின் சேனைகளின்


1.       இஸ்ரவேலின் சேனைகளின் முன்னடந்த தெய்வமே
            எங்கள் சேனாதிபதியாக எங்கள் முன்னே செல்லுமே

2.         உம்மை நம்பி உம்மை சார்ந்து உம்மை மகிமைப்படுத்தவே
            அடியார் தொடுக்கும் வேலையை நீர் ஆசீர்வதிக்க வேணுமே

3.         ஸ்நானகன் யோவானோடே இயேசு ஸ்நானம் வாங்கும் வேளையில்
            வந்தமர்ந்த வான்புறாவே வாருமிந்த நேரத்தில்

4.         அன்று நூற்றிருபதுபேர் சென்றதோர் மேல் வீட்டினில்
            வந்தமர்ந்த அக்கினியே வாருமிந்த நேரத்தில்

5.         சமுத்திரத்தை இரண்டாக பிளந்த எங்கள் தெய்வமே
            உலர்ந்த தரையை எங்களுக்காய் ஒழுங்கு செய்ய வேணுமே

6.         ஆறு லட்சம் இஸ்ரவேலர் அப்பம் தண்ணீர் குறைவில்லாமல்
            நாற்பதாண்டு வனாந்தரம் நடத்தின எம் தெய்வமே

7.         யோசுவாவின் போர்க்களத்தில் வீரனாய் முன்னின்றவா
            சந்திர சூரிய மண்டலங்கள் தரித்து நிற்கச் செய்தவா

8.         ஏழை எலியாவின் மேலே வல்லமையாய் நின்றவா
            பாரில் பாகால் கோபுரங்கள் அழித்துப் போடும் தெய்வமே

9.         ஆதி கிறிஸ்து சீஷர் முதல் இன்று வரை பக்தரை
            ஆசீர்வதித்து வல்லமையாய் ஆளுமெங்கள் தெய்வமே

10.       புதிய வானம் புதிய பூமி ஆக்கி ஆள வருவாரே
            புதிய எருசலேமீதில் ஏழைகளைச் சேருமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...