அன்பே! அன்பே! அன்பே!


பல்லவி

                        அன்பே! அன்பே! அன்பே!
                        ஆருயிர் உறவே
                        ஆனந்தம்! ஆனந்தமே!

சரணங்கள்

1.         ஒருநாள் உம் தயை கண்டேனையா
            அந்நாளென்னை வெறுத்தேனையா
            உம்தயை பெரிதையா - என் மேல்
            உம் தயை பெரிதையா

2.         பரலோகத்தின் அருமைப் பொருளே,
            நரலோகரி லன்பேனையா?
            ஆழம் அறிவேனோ - அன்பின்
            ஆழம் அறிவேனோ?

3.         அலைந்தேன் பலநாள் உமையுமறியா
            மறந்தே திரிந்த துரோகியை
            அணைத்தீர் அன்பாலே - எனையும்
            அணைத்தீர் அன்பாலே

4.         பூலோகத்தின் பொருளில் மகிமை
            அழியும் புல்லின் பூவைப் போல
            வாடாதே ஐயா - அன்பு
            வாடாதே ஐயா

5.         இப்பாரினில் உம் அன்பின் இனிமை
            இயம்பற் கியலாதாகில் யான்
            இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
            இசைக்கவும் எளிதாமொ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு