இயேசு மணாளனே - என்
பல்லவி
இயேசு
மணாளனே - என்
நம்பிக்கையின் தீபமே
என் ஆசை ஒன்று மாத்திரமே
விண் வீட்டில் உம்மைக் காண்பதே
அனுபல்லவி
காணுவேன், காணுவேன்
நேசரை நான் காணுவேன்
அந்நிய கண்களாலே அல்ல
சொந்த கண்ணால் காணுவேன்
சரணங்கள்
1. கண்ணீரின் பள்ளத்தாக்கிதே
உம்மில் மறைந்தே வாழுவேன்
கண் மூடும் நொடி நேரத்தில்
சேர்வேன் நான் பியூலா தீரத்தில்
2. மேகம் எழும்பி செல்லுதே
கானானின் ஓரம் காணுதே
ஆசாபாசம் ஆகும் கட்டையே
அறுத்தெரிந்திடுவோமே
3. உயிர்த்தெழும்பும் காலையில்
தூதர் சங்கீதம் கேட்கையில்
தங்க கிரீட கூட்டத்தில்
என்பேர் அழைக்கும் நேரத்தில்
4. என் ஓட்டமும் பிரயாசமும்
நான் காத்த என் விசுவாசமும்
வீணல்ல அது சத்தியம்
நேசரைக் காண்பேன் நித்தியம்
Comments
Post a Comment