30 June 2018

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ


பல்லவி

                   எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ
                        எவன் பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்

சரணங்கள்

1.         எவன் அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணமாட்டாரோ
            ஆவியில் கபடமில்லாதவன் பாக்கியவான்

2.         நான் அடக்கி வைத்த மட்டும் என் எலும்புகள்
            நித்தம் என் கதறுதலினால் உலர்ந்தது

3.         இரவும் பகலும் என் மேல் உந்தன் கை
            என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்

4.         என் அக்கிரமத்தை நான் மறைக்காமல்
            என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்

5.         கர்த்தருக் கென் மீறுதலை அறிக்கை செய்தேன்
            தேவரீர் என் பாவதோஷத்தை மன்னித்தீர்

6.         இதற்காகச் சகாயம் கிடைக்குங் காலத்தில்
            பக்தியுள்ளவன் உமக்கு விண்ணப்பஞ் செய்வான்

7.         மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும்
            அப்பொழுது அது அவனை அணுகாது

8.         எனக்கு நீர் மறைவிடமாயிருக்கிறீர்
            என்னை விலக்கிக் காரும் இக்கட்டுக்கு நீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...