30 June 2018

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா


பல்லவி

                        பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
                        பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா

சரணங்கள்

1.         இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
            உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்       - பரி

2.         தேசமெங்கும் திவ்ய அக்கினியால்
            தீவினை யாவையும் சுட்டெரிக்க          - பரி

3.         கன்னிகை விருத்தர் வாலிபரும்
            உன்னத ஆவியால் நிரம்பிடவும்           - பரி

4.         பாவிகள் யாவரும் மனந்திரும்ப
            பரலோக அக்கினி நாவருளும்              - பரி

5.         இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு
            வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே        - பரி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...