கனஜோபனப்பதியே புஜபல பானி தபநேசா


193. பியாகு      ஆதி தாளம் (143)

பல்லவி

                   கனஜோபனப்பதியே புஜபல பானி தபநேசா
                   கருணாகரப்பரமே மனோகரகாந்தி ஜெகதீசா

1.         எமதாயுளைக் கிருபையால் ஜெயமுடி சூடி இலங்க வைத்தாய்
            இக வாழ்விலு மொரு தாழ்வில்லா ததி ஜோபிதமாக வைத்தாய்

2.         சேயர் பால்யராய் நடுப்பிராயராயுயிர் நீங்கின ரெத்தனை பேர்
            ஜெகமீதினில் எமைப் பாதுகாத்தருள் கோதனை எத்தனைசீர்

3.         புது ஆண்டில் பெறவேண்டும் நன்மைக்ள ஈந்தருளே தாங்கி
            பூ பதியில் நேரிடும் சதியறுத்திடும் திருக்கரமோங்கி

4.         தனதாயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தைந்தா மாண்டு கண்டோம்
            தயை மேசையன் பதன் பாசமாய் பணிந்தாசிடையும் கொண்டோம்

5.         சுரமண்டலம் தம்பூர் வீணை பிடில் மிர்தங்கம் ஜாலர் முழங்க
            சொந்தத் தோழர்கள் நாங்கள் யாவரும் கெம்பீரமாய் துலங்க
           
6.         எட்வர்ட் ராஜ்ரத்தினம் தாசருக்கவி ஓசையாகப்பாடி
            இதமாகவே நடனம் புரிகிறோம் இன்னமும் என்னமோடி

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே