நித்தம் அருள்செய் தயாளனே! - எங்கள்
194. செஞ்சுருட்டி ஆதி தாளம் (144)
பல்லவி
நித்தம்
அருள்செய் தயாளனே! - எங்கள்
நேசா ஏசு மணாளனே! - சுவாமி
அனுபல்லவி
உத்தம சற்குண தேவகுமாரா உம்பர்கள் சந்ததம்
போற்றும் சிங்காரா
சத்தியவேத வினோதலங்காரா சதி செய்யும் பேய்தலை
சிதைத்த சிங்காரா
சரணங்கள்
1. பட்சப்பரமகுமாரனே எங்கள் பாவம் தீரும் மாவீரனே
- சுவாமி!
அச்சய சவந்தர ஆத்தும நாதா அடியவர் துதிசெய்யும்
ஆரணவேதா
இரட்சண்யச் சுப சுவிசேட பிரஸ்தாபா ராஜ
கெம்பீர சங்கீத பொற்பாதா
2. சென்றாண்டெமை முகம் பார்த்தவா ஒரு சேதவிக்கின
மின்றி காத்தவா - ஸ்வாமி
இன்றோர் புதுவருஷாரம்பங்கண்டோம் ஏக சந்தோஷமாய்ச்
சந்தித்துக்கொண்டோம்
குன்றாதுமதுட ஆவியை ஈந்து கூடவே இருந்தடியார்
ஜெபம் கேட்டு.
3. சத்தியவேதமதோங்கி வாழவே சாற்றுமேசுவின் நாமம்
வாழ்கவே - எங்கள்
உபாத்திமார் தேசிமார் குருக்களும் வாழ்க
வளர்சபையோடு மாணாக்கரும் வாழ்க
துத்திய இந்திய துரைத்தனம் வாழ்க சேயனத்தியட்சரவர்களும்
வாழ்க
Comments
Post a Comment