திரித்துவத்திரியேகருக்கு தோத்திரமையா - ஆகா
192.
பல்லவி
திரித்துவத்திரியேகருக்கு
தோத்திரமையா - ஆகா
விருப்பமாய்
இவ்வாண்டைக் காண திருக்கிருபை செய்ததாலே
1. ஆண்டவர் கிருபையாய் தந்த வருடமுமிதே - புது
ஆரம்ப ஜனுவரி முதல் நூதன நாளுமிதே
பாவிகளாம் நாங்களிதில் பங்கு பெற்றுக்
கொண்டதாலே - திரி
2. அநேகர் காணக்காத்திருந்தார் காணவில்லையே
- இப்போ
அடியார் மெய்யாய் கண்டு கொண்டோம் ஆச்சரியமே
அநித்திய உலகைத் தாண்டி ஆனந்தம் நிலைக்கச்
செய்யும் - திரி
3. கதையைப்போலே நாட்களெல்லாம் கழிந்து விட்டதே
ஏசு
கர்த்தனின் வருகை மிக அடுத்துவிட்டதே
காலை மாலை ஜெபத்துடனே விழித்திருக்கத்
தயைபுரியும் - திரி
4. மகிழ்ச்சியும் சிலருக்குண்டு இந்த வருஷமே
- மன
மயக்கமும் பலருக்குண்டு இந்த வருஷமே
புகழ்ச்சியாய் கீதங்கள் பாடிப் போற்றவரம்
தாருமையா - திரி
5. வேதத்தைத் தினம் வாசிக்க விருப்பம் தாருமே
- எந்த
வேளையும் ஜெபங்கள் செய்ய விழிப்பைத் தாருமே
நாதனாம் கிறிஸ்தின் ரத்தம் பூசி நன்றாய்
கழுவுமையா - திரி
6. நாட்களை எண்ணுமறிவைத் தாருமையாவே - முன்னே
நரகமோட்ச முண்டெனவே கூறுமேசையா
வானராஜன் வரக்காலம் அடுத்திடுது புது வருஷம் - திரி
7. பரிசுத்த பிதாவுக்கென்றும் ஸ்தோத்திரமையா
- எங்கள்
பாக்கியராம் ஏசுவுக்கு ஸ்தோத்திரமையா
தரிசனம் கொடுக்கும் வல்ல ஆவிக்கெங்கள்
தோத்திரமே - திரி
Comments
Post a Comment