கண்ணுக்கு காணும் பூவுமல்ல


332.

1.       கண்ணுக்கு காணும் பூவுமல்ல - அது
          மண்ணில் முளைத்திடும் பூவுமல்ல - இந்த
            மாதர்கள் அணிந்திடும் பூவுமல்ல - அது 'அன்பு'

2.         பலபூக்களில் எழும்பும் வாசமல்ல - அது
            பன்னீரால் உண்டாகும் வாசமல்ல - இந்த
            பாவையர்கள் தெளித்திடும் வாசமல்ல - அது 'விசுவாசம்'

3.         காகிதத்தில் எழுதும் மையுமல்ல - அது
            கண்ணுக்கழகிடும் மையுமல்ல - இந்த
            காதலரை மயக்கிடும் மையுமல்ல - அது 'பொறுமை'

4.         சாஸ்திரத்தில் எழுதும் தானமல்ல - அது
            சண்டைக்கு முந்திடும் தானமல்ல - அது
            சிறப்புடன் செய்திடும் தானமல்ல - அது 'சமதானம்'

5.         ஜாதி வினையால் வரும் தோஷமல்ல - அது
            சாத்தானால் உண்டாகும் தோஷமல்ல - அது
            சகலரால் உண்டாகும் தோஷமல்ல - அது 'சந்தோஷம்'

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு