09 June 2018

என்ன சந்தோஷம் என்ன


331.
பல்லவி

                   என்ன சந்தோஷம் என்ன சந்தோஷம்
                   என்ன சந்தோஷம் என்ன சந்தோஷம்

அனுபல்லவி

                        மணவாட்டியின் பாட்டைக் கேட்டால் என்ன சந்தோஷமே

1.         என்ன வினோதமே அண்டி வந்து பாருமே
            அண்ணலுக்குகந்ததோர் கன்னிகையின் ரூபமே
            மின்னல் போலிலங்கிடுதே விண்ணிலழகுடனே              - என்ன

2.         மன்னனோடு மகிழுவோம் மனையிலேறி வாழுவோம்
            கன்னியர்கள் யாவரும் காதலனைக் காணுவோம்
            அன்னையோடு அனந்தகாலம் அழிவில்லாதிருப்போம்  - என்ன

3.         பெருகுதே பேரின்பமே பேதை கட்கு இன்றுமே
            பேருலகில் யாவுமே வீணதாகத் தோணுதே
            மேலுலகில் உண் டெமக்கு என்ன பேரின்பமே                - என்ன

4.         ஆகா இது அதிசயம் அளவில்லாத பரவசம்
            சாவில்லாத நித்தியம் நாமுமரசாளுவோம்
            பாவமணுகாத பாலன் சாயலணந்திடுவோம்                    - என்ன



No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...