09 June 2018

தொழுகிறோம் எங்கள் பிதாவே


342.

பல்லவி

                   தொழுகிறோம் எங்கள் பிதாவே
                        பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

அனுபல்லவி

                        பரிசுத்த அலங்காரத்துடனே,
                        தரிசிப்பதினால் சரணம் சரணம்

1.         வெண்மையும் சிவப்புமானவர்
            உண்மையே உருவாய்க் கொண்டவர்
            என்னையே மீட்டுக் கொண்டவர்
            அன்னையே இதோ சரணம் சரணம்      - தொழுகிறோம்

2.         தலை தங்கமயமானவர்
            தலைமயிர் சுருள் சுருளானவர்
            பதினாயிரம் பேரில் சிறந்தவர்
            பதினாயிரமாம் சரணம் சரணம்              - தொழுகிறோம்

3.         கண்கள் புறாக் கண்கள் போல
            கன்னங்கள் பாத்திகள் போல
            சின்னங்கள் சிறந்ததாலே
            எண்ணில்லாத சரணம் சரணம்              - தொழுகிறோம்

4.         கரங்கள் பொன்வளையல்கள் போல
            நிறங்களும் தந்தத்தைப்போல
            கால்களும் கல் தூண்கள் போல
            காண்பதாலே சரணம் சரணம்                - தொழுகிறோம்

5.         சமஸ்த சபையின் சிரசே
            நமஸ்காரம் எங்கள் அரசே
            பிரதானம் எம்மூலைக்கல்லே
            ஏராளமாம் சரணம் சரணம்                    - தொழுகிறோம்

6.         அடியார்களின் அஸ்திபாரம்
            அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
            கூடிவந்த எம் அலங்காரம்
            கோடாகோடியாம் சரணம் சரணம்         - தொழுகிறோம்

7.         பார்த்திபனே கனதோத்திரம்
            கீர்த்தனம் மங்களம் தோத்திரம்
            வாழ்க வாழ்க வாழ்க என்றும்
            அல்லேலூயா ஆமென், ஆமென்            - தொழுகிறோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...