அத்தனே உன் திருநாமத்துக்


343. இராகம் கம்போதி             சாப்பு தாளம்

பல்லவி

          அத்தனே உன் திருநாமத்துக் கொத்தருசிவேறதுண்டோ
          எத்துணையேனும் எனக்கு ஈவாய்

அனுபல்லவி

            நித்தம் நித்தம் தூதர் திரள் துத்தியம் செய்தே பணியும்
            சுத்தனே சுயாதிபா நல் கர்த்தனே என் ஆவல் தீர

1.         நேச விசுவாசிகளின் பேசவரிதான இன்பம்
            யேசுவென்ற பேரல்லலால் வேறெது
            தாசன் தாவீதாசையோ தேடி ருசி பார்க்கச் சொன்னான்
            தேசமெங்கும் அந்த நாம தேயத்ததைப்போல் நாமமில்லை       - அத்தனே

2.         ஆரமது மணமுமிஞ்சி நாறுமே ஓர் வேளை நஞ்சே
            ஆகுமோ தின் நாமம் ருசி ஆகா
            தேனுமது சுவை ருசியை செப்பிடினுமதற்கொப்பாமோ
            சேவடி தாழ்ந்தேனுனது சித்தமிரங்காயென் மீது            - அத்தனே

3.         தப்பிதந்தான் பல செய்யினும் அப்புறம் தள்ளாமலெனை
            ஒப்பமாய் நின் கிருபையினால் சேர்த்தாய்
            இப்பேர் ஜீவபானம் அப்பமும் அருள்வேனென்று நீரே
            செப்பினதைக் கேட்டு மனமற்றிருப்ப தெனதுமப்போ      - அத்தனே

4.         வருத்தமுற்ற பாவியே உன் பெருத்த பாவச் சுமையை என்னில்
            வைத்து இளைப்பாறி வசி என்றார்
            பெருத்த உந்தன் கருணைக்கேதுசெயத் தகுந்தோன் பேதைமீது
            உருத்துள்ளவா ஆருயிரைக் கொடுத்தருளினாயாதலாலே        - அத்தனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு