ஓய்வுநாள் இது சபையே


306. இராகம் (ஆரிவராராரோ)                 (286)

பல்லவி

                   ஓய்வுநாள் இது சபையே - தேவன்
                   உவந்துனக்கருளினாரே

அனுபல்லவி

                   ஆதலால் அவர் திரு ஆலயம் ஏகுவோம்
                        வா திருச்சபையோரே

1.         புவி வான் உயிர் படைத்து - தேவன்
            புகழோடு தொழில் முடித்து
            ஆறுதினம் சென்றேழில் அமர்ந்தனர்
            ஆ! திருச்சபையோரே                           - ஓய்வு

2.         வேலை ஜோலிகள் நிறுத்தி - நமது
            தேவனை முன்னிறுத்தி
            காலை மாலை தவறாது தேவாலயம்
            வா திருச்சபையோரே                            - ஓய்வு

3.         நாள் இதை நினை மனமே - நமது
            நாதன் உயிர்த்ததினமே
            வானிருந்திறங்கின வலுதிரு ஆவியின்
            நாள் திருச்சபையோரே                         - ஓய்வு

4.         கர்த்தர் வசனம் கேட்டு - அதை
            பத்திரம் அகம்வைத்து
            கற்பனை நான்கினில் கர்த்தருரைப்படி
            காதிருச்சபையோரே                             - ஓய்வு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு