திருமுதலொரு பொருளாம் பரனே
305. இராகம் (தேவப்பிதா என்தன் மேய்ப்பனல்லோ)
(285)
பல்லவி
திருமுதலொரு
பொருளாம் பரனே
வருவாய்
ஆசி தருவாயே
அனுபல்லவி
இருவரோ மூவரோ என் பெயரால்
இசைந்திருந்தாலிடை வருவேனேன்ற
1. காதினில் தொனிக்கும் நல்லுன துரையை
கருத்துடனே யகத்திருத்தி வைத்து
வேதனே எம் நடக்கையில் விளக்க
வேண்டுமுன்னருள் புரிவினை நாசா - திரிமுதலொரு
2. நன்னில மதில் விழுவிதை எனவே
நாதனே யுன் வசனம் பலித்தே
ஒன்று நூறாய் பலன் தந்திடவே
உதவி செய்வாய் பர உபகாரா - திரிமுதலொரு
3. பறவைகள் விதைகளைப் பொறுக்காமல்
படருமுள் முளைகளை நெருக்காமல்
அறுப்புக்குத் தகுமணி மிகப்பயக்க
அருள் மழை பொழிந்து நற்பயிர் வளர - திரிமுதலொரு
4. பேசும் நின் தாசர்க்கு வாக்குடனே
பேர்வரம் ஆவியும் ஈந்திடுவாய்
நீசர் மன்றாட்டினை ஏற்றருள்வாய்
நிறை தயை சாகா தாரகமே - திரிமுதலொரு
Comments
Post a Comment