09 June 2018

கண்களை ஏறெடுப்பேன்

கீதங்களும் கீர்த்தனைகளும் - 22

கிறிஸ்தவ கீர்த்தனைகள் - 17



328.      இராகம் பியாகு          சாப்பு தாளம்

பல்லவி

          கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்

            கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி

            விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
            எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்      - கண்களை

1.         காலைத் தள்ளாடவொட்டார் - உறங்காது காப்பவர்
            காலைத்தள்ளாடவொட்டார்,
            வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
            காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்                       - கண்களை

2.         பக்தர் நிழல் அவரே - என்னை ஆதரித்திடும்
            பக்தர் நிழல் அவரே
            எக்கால நிலைமையில் எனைச்சேதப்படுத்தாது
            அக்கோலம் கொண்டோனை அக்காலம் பரியவே          - கண்களை

3.         எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
            எல்லாத் தீமைகட்கும்
            பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
            நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்                     - கண்களை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...