இந்துதேச மாதர் நாமும்
327. இராகம் (வாருமையா போதகரே)
1. இந்துதேச
மாதர் நாமும், எழுந்திடுவோம் ஏசுவுக்காய்
சுந்தாமைந்தன்
துணையால், ஜோதி எங்கும் வீசிடுவோம்
2. இருள் நிறைந்த புவியிலெமக், கேசுவொளிகாட்டின்
போல்
அருளின்றி தவித்திடுவோர்க், காதரவே புரிந்திடுவோம்
3. காலையில் நாம் எழுந்திடுவோம், காத்தன் முகம்
கண்ட பின்னே
வேலையில் நாம், தரித்திடுவோம், விளக்கொளிபோல்
விளங்கிடுவோம்
4. அன்புடன் பொறுமை தினம், ஆபரணமாக்கிடுவோம்
இன்பமிகும் குடும்பஜெபம், என்றுமே கைவிடாதிருப்போம்
5. நாம் வளர்ப்போம் நம்சிசுவை, நலமிகுந்த பாதைகளில்
சாமுவேலைப்பொலனுதினமும், ஸ்வாமி தரிசனமடைய
6. காட்டிடுவோம் வீட்டிலன்பை, கண்டிடுவோர் மகிழந்திடவே
வீட்டிலில்லா வெளிச்சடங்கை, வேஷமென்று
விலக்கிடுவோம்
7. ஆலயம் நாம் ஏகிடுவோம், அன்பர் கூடி தொழுதிடவே
சாலவுமே மாதர் சங்கம், தழைத்திடவே உழைத்திடுவோம்
8. ஏசுவென்னும் சுந்தரனை இதயமதில் இருத்திடுவோம்
காசினியில் கதிபெறவே, ஆசிபுரிபவரவரே
Comments
Post a Comment