பல்லவி
எழும்பு சீயோனே! இயேசு இதோ வருகிறார் - இயேசு
1. இயேசுவின் வருகை மிக சமீபமாகுதே - இனி
மோசந்தான் அசதியாக ஜீவித்து வந்தால் -
பின்பு
அலறிடுவாயே இயேசு கைவிடும்போது! - வேகம்
2. பூலோக நேசம் உன்னில் சற்றும் வேண்டாமே
மேலோகம் பார்த்துப் பார்த்து லோகத்தை வெறு
- இது
மாய லோகமே உன்னை மோசம் போக்குமே! - வேகம்
3. பாவங்கள் இருதயத்தில் ஏதேனுண்டோ - சிறு
பாரங்கள் உன்னைக் கீழே தள்ளிவிடுமோ - உந்தன்
இருதயத்தை நீ பரிசுத்தமாக்காயோ? - வேகம்
4. லௌகீகக் கவலையோடும் பெருந்தீனியும் - வெறு
மாமிச சுபாவத்தோடு நான் என்பதுமே - உனை
மோசம் போக்குமே உந்தன் ஆசை அழியுமே! - வேகம்
5. மேகத்தில் இயேசு ராஜன் வேகம் வரவே பரம்
ஏறுவார் பரிசுத்தர் வேறு ரூபமாய் - அன்று
மேகமேறிட நீயும் ஆயத்தந்தானா? - வேகம்
6. ஆகாயத்தில் நடக்கும் கல்யாணத்திலே - சுத்தர்
பாடுவார் அல்லேலூயா செட்டை அடித்து - அப்போ
அங்கிருப்பாயோ பூவில் ஓடி ஒளிப்பாயோ? - வேகம்
7. அந்தி கிறிஸ்து அரசாட்சி செய்யும் வேளையில்
- கோப
அக்கினி பூமியில் சொரியும் வேளையில் -
நீயும்
அகப்படாமலே இன்று தப்பிக்கொள்வாயோ? - வேகம்
No comments:
Post a Comment