27 June 2018

இராஜாதி இராஜன் இயேசு வருவார்


1.       இராஜாதி இராஜன் இயேசு வருவார்
            சந்திக்க ஆயத்தமா?
            வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
            சந்திக்க ஆயத்தமா?

பல்லவி

                        கேள்! கேள்! மானிடரே
                        சந்திக்க ஆயத்தமா?
                        இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
                        சந்திக்க ஆயத்தமா?

2.         பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
            சந்திக்க ஆயத்தமா?
            பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
            சந்திக்க ஆயத்தமா?                           - கேள்! கேள்!

3.         குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
            சந்திக்க ஆயத்தமா?
            கத்திக் கதறியே தாழிடுவார்
            சந்திக்க ஆயத்தமா?                           - கேள்! கேள்!

4.         உலகமனைத்துமே கண்டிடுமே
            சந்திக்க ஆயத்தமா?
            பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
            சந்திக்க ஆயத்தமா?                           - கேள்! கேள்!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...