என் ஜனம் அழிகிறதே ஆ! ஆ! ஆ!
பல்லவி
என்
ஜனம் அழிகிறதே ஆ! ஆ! ஆ!
எனக்கார்தானோ பாவார் பூவிலே
- சேவை செய்ய
சரணங்கள்
1. தீமை செய்யும் தீயோர் அதிகம்
ஜீவனீவார் யாருமே இல்லையே - என்
2. லோக இன்பம், பாவ நேசம்
துரோக சிந்தை மேற்கொண்டு விட்டதே - என்
3. தேவ அன்பை அறியார் அநேகர்
தேவ வசனம் வாஞ்சிப்போரு மில்லையே - என்
4. மாயை யதிலே தயங்குகிறாரே
மாளுவோரை மீட்போரு மில்லையே - என்
5. அழிவே வழியில் சந்தித்திடுதே
அந்தோ! அந்தோ! இக்காட்சி பாருமே - என்
6. யாரோ யாரோ போவா ரெனக்காய்
ஆத்துமாக்கள் சேர்க்க ஜீவனுக்காய் - என்
7. அனலில்லாத சபைகளதிகம்
ஆத்துமாக்களைக் கொல்வோரு மநேகர் - என்
Comments
Post a Comment