உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா


                   உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?

1.         பூவில் இயேசு வரும்போது பொல்லாரோடிடுவார்
            இந்த விதம் நீ இருந்தால் என்ன செய்திடுவாய்?           - உன்

2.         மேகங்களுடன் வருவேனென்று சொன்னவர்
            இப்போ மேகந்தனில் வரும்நேரம் கிட்டிச் சேருதே        - உன்

3.         தேவ தூதரோடும் பெரும் எக்காளத்தோடும்
            தம் பக்தரைச் சந்திக்கும் நேரம் கிட்டிச் சேருதே          - உன்

4.         அவபக்தர் அக்காலத்தில் அழுதிடுவார்
            அவர் வரும்போது இரட்சிப்படைய மாட்டார்                - உன்

5.         பாவங்களில் ஜீவிப்பார் பதுங்கிடுவார்
            பரிசுத்த மாக்கப்பட்டோர் பறந்திடுவார்                         - உன்

6.         இரக்கமுள்ள இந்த நாளில் மனந்திரும்பு
            இந் நிமிஷம் ஏற்றுக்கொள்ளும் மன்னிப்புப்பெற             - உன்

7.         உனக்காய் மரித்த இயேசு காத்து நிற்கிறார்
            இயேசு உன்னைப் பட்சமாக ஏற்றுக்கொள்வார்               - உன்

8.         பரனை ஏற்றுக் கொள்ளாதோர் அந்த நாளிலே
            பதுங்கி நித்தியமாகப் பரிதவிப்பார்                                - உன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு