எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ?


பல்லவி

                   எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ?
                        இதை உணராய் நெஞ்சமே

அனுபல்லவி

            சுத்த பரமன் பதம் இத்தரையில் அடைந்து
            சொர்க்க பதவிக்கிப்போ பக்குவம் செய்யாவிடில் - எத்

சரணங்கள்

1.         பால வயதினிலோ பாடும் சமயத்திலோ
            கோலமாய் மணக்கோலம் கொள்ளும் தருணத்திலோ
            சீலமுடன் பரனைத் தேடும் சமயத்திலோ?
            காலன் வரவுண்டு கலங்கும் தருணத்திலோ?                 - எத்

2.         வாலிபன் நான் இப்போ வயது மதிகமில்லை
            காலன் வரவுக்கின்னும் காலம் அதிகமென்று
            மேலான எண்ணம் கொண்டு வீண் நாட் கழிக்கும்போதோ
            கோலொன்று கையில் தாங்கி குறுநடை கொள்ளும்போதோ      - எத்

3.         தாய், தந்தை, தமர், தாரம் சகலமுமிருந்தாலும்
            சஞ்சீவி மருந்துகள் கைவசமிருந்தாலும்
            தீயன் வலையில் சிக்கித் திகைக்கும் தருணமதில்
            நாயன் உதவி இல்லாமல் நசிவது திண்ணம் திண்ணம்             - எத்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு