30 June 2018

பாவத்தின் பலன் நரகம்


1.       பாவத்தின் பலன் நரகம், ஓ பாவி நடுங்கிடாயோ?
            காண்பதெல்லாம் அழியும், காணாததல்லோ நித்தியம்

                        இயேசு ராஜா வருவார்
                        இன்னும் கொஞ்சங் காலந்தான்
                        மோட்சலோகம் சேர்ந்திடுவோம்            - இயேசு

2.         உலக இன்பம் நம்பாதே
            அதின் இச்சை யாவும் ஒழியும்
            உன் ஜீவன் போகும் நாளிலே
            ஓர் காசும் கூட வாராதே!                      - இயேசு

3.         உன் காலமெல்லாம் போகுதே
            உலக மாய்கையிலே
            ஓ தேவ கோபம் வருமுன்
            உன் மீட்பரண்டை வாராயோ                - இயேசு

4.         தேவன் பின் வெள்ளம் ஓடுதே
            கல்வாரி மலை தன்னிலே
            உன் பாவம் யாவும் நீங்கிப்போம்
            அதில் ஸ்நானம் செய்வதாலே               - இயேசு

5.         மா பாவியான என்னையும்
            என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
            ஓ பாவி நீயும் ஓடிவா
            தேவாசீர்வாதம் பெறுவாய்                     - இயேசு

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...