30 June 2018

நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்


சரணங்கள்

1.       நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்
            இந்தப் பொய்யுலகை நம்ப வேண்டாம்
            நேசம் காட்டித் துரோகம் செய்யும்
            இந்தப் பாழுலகை நம்ப வேண்டாம்

2.         உன்னைப் பெற்ற மாதா எங்கே?
            போஷித்த உன் தந்தை எங்கே?
            போய் விட்டாரோ போய் விட்டாரோ?
            உன்னை விட்டுப் போய்விட்டாரோ?

3.         அண்ணனெங்கே தம்பி எங்கே
            அக்காளெங்கே தங்கை எங்கே?
            ஆசையாகத் தேடி வைத்த
            ஆஸ்தி செல்வம் தானுமெங்கே

4.         திருடனைப்போல் சாவு வரும்
            திடுக்கிடுவாய் நீயுமப்போ
            பாம்பின் வாயில் தவளை போலப்
            பரிதவிப்பாய் பரிதவிப்பாய்

5.         இயேசு நாதர் பாதம் தேடு
            மீட்பை இன்றே பெற்றுக் கொள்வாய்
            குருசில் தொங்கும் நேசர் பாரும்
            குணமாக்குவார் இப்போ வாரும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...