உலக முன் சதமென்று எண்ணியிராதே
பல்லவி
உலக
முன் சதமென்று எண்ணியிராதே
பலவித பாதாள வலையிற்சிக்காதே
- உலகமும் சதமல்ல
சரணங்கள்
1. மாதா பிதா மற்றுஞ் செல்வமிருந்தாலும்
மரணம் வந்தே யுந்தன் வாழ்வைக் குலைக்கும் - உலக
2. சாவின் கோரக் காட்சி நெஞ்கையில்
பாவி! நான் என் செய்வேனென்று திகைப்பாய் - உலக
3. நித்திய வாதைக்கு இரையாகி விடுமுன்
சத்தியர் பாதத்தைப் பாவி நீ தேடு - உலக
4. நரகத்தில் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல
பரலோக கீதங்களுன்னை வதைக்கும் - உலக
5. பாவ விமோசன மிப்போதே பெறுவாய்
தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு - உலக
Comments
Post a Comment