சுய அதிகாரா சுந்தரக் குமாரா


217. காமாஸ்         ஆதி தாளம்   (160)

பல்லவி

          சுய அதிகாரா சுந்தரக் குமாரா

அனுபல்லவி

            சொந்த உலகந்தனைத் துறந்தமரி மைந்தனான          - சுய

1.         அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
            அதை ஒரு பம்பரம்போ லிமைத்தனையே
            துயில்போ லாகாயமதை லகுவாய் சமைத்ததிலே
            ஜோதி பலமாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த      - சுய

2.         கரைமதகற்ற குளம் புவியிலுண்டோ
            கடலுக் கவர் சொல்லின்றிக் கரைகளுண்டோ
            திரை திரையாக ஜலம் மலைபோல் குவிந்தெழுந்தும்
            சேதமின்றிப் பூதலத்தை மாதயவாய் பாதுகாக்கும்         - சுய

3.         நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
            நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
            மரமுயிர் தாது இன்னும் வான் புவியனைத்தையுமோர்
            வார்த்தையால் க்ஷணப்பொழுதில் நேர்த்தியா யுண்டாக்கி வைத்த        - சுய

4.         பாவமனுவோர் முகத்தைப் பார்த்தாயே
            பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தாயே
            சுவாமியும்மைப் பற்றும் சுவாமி தாசருக்கிரங்க வேணும்
            தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தேன் கெஞ்ச மனுகேட்டருள் வாய்                   - சுய

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு