சரணம் சரணமையா சருவேசா உந்தனுக்கு
216. இராகம் தெம்பாங்கு (159)
சரணம்
சரணமையா சருவேசா உந்தனுக்கு
சரணம் சரணமையா
1. இரவும் பகலுமாக மறவேனே முச்சுடரே
வரம்பெறவே வேணுமையா உன்தயவை அணிந்தவரே
வந்திடுவாயே வரம் தந்திடுவாயே சபைகொண்டிடுவாயே
2. சிங்கக் குகைதனிலே சேதமின்றித் தானியேலை
பங்கப்படாமல் காத்த பக்தியுள்ள என் தகப்பா
பாதம் கெஞ்சுகிறேன் பலநாளும் தேடுகிறேன்
பரிவாக எண்ணாமல்
3. அந்த மணப் பந்தலிலே ஆறுகுடம் தண்ணீரை
அதிரசமாகச் செய்த அருமையுள்ள என் தகப்பா
ஆசை கொள்ளுகிறேன் என்னை ஆளவாராயோ மனம்
வாடி நிற்காமல்
4. சாத்ராக்கு மேஷாக்கு ஆபேத்து நேகோவைப்போல்
ஆதரிக்க வேணுமையா அடியேனுன்னைக் கெஞ்சுகிறேன்
ஆசை கொள்ளுகிறேன் எனை ஆளவாராயோ மனம் வாடி
நிற்கிறேன்
Comments
Post a Comment