எப்போதும் நாதனைத் தோத்திரி
218. இராகம் இங்கிலீஷ் (161)
பல்லவி
எப்போதும்
நாதனைத் தோத்திரி
அனுபல்லவி
நாள் தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தை
பணிந்து
1. இப்பூதலத்தில் நீர் மனு ஜென்மமாயினீர்
ஏதுக்கள் உள்ளத்தில் எண்ணிக்கையாயினீர்
அப்பா என் அப்பா என்றழைக்கப் பிறந்தனை - எப்போதும்
2. சண்டாள ராயினீர் என் காயம் நீங்கவே
விண்டலம் விட்டு இம்மண்டலம் வந்தீரே
பரமண்டலம் விண்டவ என்னைக்கை தாங்கவே - எப்போதும்
3. கிறிஸ்தேசு நாயகன் கிருபைஉன் பூரணம்
கெம்பீர மாகநீ சொல்வா யுச்சாடணம்
பரிச்சேதம் சாலம்வேண்டாம் தாழ்மைமுதற்
காரணம் - எப்பொழுதும்
4. துன்பங்கள் மூடினும் துக்கங்கள் ஆளினும்
சிற்றின்பம் அறிகிலேன் இன்றே நீர் தாவினும்
கண்பஞ்சடைய சாவுக்கென்றேதும் வரினும் - எப்போதும்
5. வீட்டிலும் காட்டிலும் வெளியிலும் செழிப்பிலும்
பாட்டிலும் படிப்பிலும் கேட்டிலும் செழிப்பிலும்
நாட்டிலம் நகரிலும் ஞான முயற்சியிலும் - எப்போதும்
Comments
Post a Comment